search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் சாதன பொருட்கள் சேதம்"

    • இடியுடன் ஆலங்கட்டி மழையும் பெய்ததால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.
    • மின் சாதனப் பொருட்கள் வெடித்து சிதறின.

    ஈரோடு:

    ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று மாலை 5 மணி முதல் கனமழை பெய்தது. இடியுடன் ஆலங்கட்டி மழையும் பெய்ததால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.

    இந்நிலையில் கனி ராவுத்தர்குளம், காந்தி நகரில் 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியை சேர்ந்தவர் துறையன் (65). இவரது மனைவி வனஜா துறையின் (63). கன மழை பெய்து கொண்டிருந்ததால் இவர்கள் வீட்டுக்குள் இருந்தனர்.

    அப்போது இவர்கள் வீட்டின் மாடியில் தண்ணீர் தொட்டியில் இடி விழுந்தது. இதையடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் வீட்டில் உள்ள மின்சார மீட்டர் பாக்ஸ் வெடித்து சிதறியது. வீட்டில் உள்ள பேன், மிக்சி, பிரிட்ஜ், டிவி, லைட்டுகள் உள்ளிட்ட மின் சாதனப் பொருட்கள் அனைத்தும் வெடித்து சிதறின.

    இதனால் வீடு புகைமூட்டத்துடன் காணப்பட்டது. இவர்கள் வீட்டின் முன் பகுதி இடிந்து விழுந்தது.நல்லவேளையாக இருவரும் வீட்டை விட்டு வெளியே சென்றதால் உயிர் தப்பினர்.

    இதேப்போல் இவர்கள் பக்கத்து வீட்டை சேர்ந்த முருகேசன், மற்றும் பழனியம்மாள் வீடுகளில் இடியின் தாக்கம் காரணமாக அனைத்தும் மின்சாதன பொருட்களும் வெடித்து சேதமடைந்தது. இதில் அவர்களும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்ததால் உயிர்தப்பினர்.

    மேலும் அந்தப் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் இடித்தாக்கம் காரணமாக மின்சாதன பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்து பழுதானது.

    ×